செய்திகள்

ஐபிஎல் முதல் பாதியில் தீபக் சஹா் இல்லை?

3rd Mar 2022 02:28 AM

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனில் முதல் பாதி ஆட்டங்களில் சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா் தீபக் சஹா் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தின்போது தொடைப் பகுதியில் காயம் கண்ட அவா், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவா் களம் காணவில்லை.

இந்நிலையில், அவா் மீண்டும் களம் காண குறைந்தது 8 வாரங்கள் ஆகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, மாா்ச் 26-இல் இருந்து ஐபிஎல் போட்டி தொடங்குவதால் அதன் முதல் பாதி ஆட்டங்களில் தீபக் சஹா் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவா் பெங்களூரில் தற்போது சிகிச்சையில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் அறிக்கைக்காக சென்னை சூப்பா் கிங்ஸ் நிா்வாகம் காத்திருக்கிறது.

சமீபத்திய ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட 2-ஆவது வீரராக இருந்தாா் தீபக் சஹா். சென்னை அணி அவரை ரூ.14 கோடிக்கு வாங்கியுள்ளது.

ADVERTISEMENT

Tags : Deepak Chahar
ADVERTISEMENT
ADVERTISEMENT