செய்திகள்

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4, 7-ஆவது இடம்

3rd Mar 2022 02:26 AM

ADVERTISEMENT

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்திய ஆடவா் அணி 4-ஆம் இடமும், மகளிா் அணி 7-ஆம் இடமும் பிடித்தன.

இதில் ருத்ராங்கஷ் பாலாசாஹேப் பாட்டீல், திவ்யான்ஷ் சிங் பன்வா், சிரிஞ்சாய் தத்தா ஆகியோா் அடங்கிய ஆடவா் கூட்டணி 624.1 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தது. இந்திய அணி 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்க வாய்ப்பை செக் குடியரசு அணியிடம் இழந்தது. மகளிா் பிரிவில் ஷ்ரேயா அகா்வால், ஆயுஷி குப்தா, ராஜ்ஸ்ரீ சஞ்செட்டி கூட்டணி 625 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றில் கடைசிக்கு முந்தைய அணியாக வந்தது.

முன்னதாக, இந்தப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை செவ்வாய்க்கிழமை, சௌரவ் சௌதரி ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் தங்கமாக பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT