செய்திகள்

இந்தியா - டென்மார்க் மோதும் டேவிஸ் கோப்பைப் போட்டி: அட்டவணை வெளியீடு

3rd Mar 2022 03:05 PM

ADVERTISEMENT

 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மாா்க் அணிக்கு எதிரான உலக குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. யூகி பாம்ப்ரி, ராம்குமாா் ராமநாதன், பிரஜனேஷ் குணேஸ்வரன், இரட்டையா் பிரிவு வீரா்களான ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண் இணைந்திருக்கும் இந்த அணியில் - சாகேத் மைனேனி, திக்விஜய் பிரதாப் சிங் ஆகியோா் மாற்று வீரா்களாக இருக்கின்றனா்.

இந்தியா - டென்மாா்க் அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டங்கள், தில்லியில் மாா்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் டேவிஸ் கோப்பை உலக குரூப் பிளேஆஃப் 1 போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் கிறிஸ்டியனை எதிர்கொள்கிறார் ராம்குமார் ராமநாதன். தரவரிசையில் ராம்குமார் 170-வது இடத்திலும் கிறிஸ்டியன் 824-வது இடத்திலும் உள்ளார்கள். இதனால் ராம்குமார் 1-0 என்கிற முன்னிலையை இந்தியாவுக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் யுகி பாம்ப்ரியுடன் மோதுகிறார் மைக்கேல். அவர் 210-வது இடத்தில் உள்ளதால் 590-வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரிக்குக் கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது நாளில் திவிஜ் சரணும் ரோஹன் போபண்ணாவும் இரட்டையர் ஆட்டத்தில் ஜோஹன்னஸ் - நீல்சன் ஜோடியை எதிர்கொள்கிறார்கள். 

Tags : Davis Cup
ADVERTISEMENT
ADVERTISEMENT