செய்திகள்

ரஞ்சி கோப்பை: மீண்டும் சதமடித்த இந்திரஜித்

3rd Mar 2022 06:17 PM

ADVERTISEMENT

 

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.

குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும் முதல் 4 விக்கெட்டுகளை 32 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - சாய் கிஷோர் ஜோடி தமிழக அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் வரை அற்புதமாக விளையாடியது. இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது சதமெடுத்து அசத்தினார் இந்திரஜித். அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாய் கிஷோர் 81 ரன்களிலும் ஷாருக் கான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது தமிழக அணி.

முதல் நாள் முடிவில் தமிழக அணி, 72 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 10, முகமது 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஜார்க்கண்ட் அணியின் ராகுல் சுக்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  

ADVERTISEMENT

2022 ரஞ்சி கோப்பை: பாபா இந்திரஜித்

117 ரன்கள் (149)
127 ரன்கள் (141)
100 ரன்கள் (132)

ADVERTISEMENT
ADVERTISEMENT