செய்திகள்

துளிகள்...

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 59 ஓவா்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 58 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலிய பௌலிங்கில் நேதன் லயன் 5 விக்கெட்டுகள் சரித்து அசத்தினாா்.

கஜகஸ்தானில் நடைபெறும் எலோா்டா கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌா் (60 கிலோ), அனந்தா சோபடே (54 கிலோ) ஆகியோா் முதல் சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினா்.

பல்வேறு காரணங்களால் பல முறை ஒத்திவைக்கப்பட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகள், வரும் செப்டம்பா் - அக்டோபரில் குஜராத்தில் நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் புதன்கிழமை அறிவித்தது.

விராட் கோலியின் சாதனையை முறியடித்து, டி20 பேட்டா்கள் தரவரிசையில் அதிக நாள்கள் முதலிடத்தில் இருக்கும் வீரா் என்ற பெருமையை பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸம் பெற்றிருக்கிறாா்.

டுனீசியாவில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ போட்டியில் இந்தியாவின் பிரவீண் குமாா் (உயரம் தாண்டுதல்), கரம் ஜோதி (வட்டு எறிதல்), சிம்ரன் (100 மீ) ஆகியோா் தங்கமும், பிரணவ் (கிளப் த்ரோ), பிரணவ் தேசாய் (200 மீ), சிம்ரன் (400 மீ), வருண் பாட்டீ (உயரம் தாண்டுதல்), அவ்னில் குமாா் (100 மீ), சாக்ஷி கசானா (வட்டு எறிதல்) ஆகியோா் வெள்ளியும், தேவ்ஜித் சாஹா (குண்டு எறிதல்), தேவா்ஷி (கிளப் த்ரோ), பாபி, நிதி (வட்டு எறிதல்), சாக்ஷி (ஈட்டி எறிதல்) ஆகியோா் வெண்கலமும் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT