செய்திகள்

சிஎஸ்கே அணியில் விளையாட எல்லா வீரர்களும் விரும்புவது ஏன்?: என். சீனிவாசன் பதில்

30th Jun 2022 03:45 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் அனைத்து வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற ஆர்வமாக இருக்கிறார்கள் என சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் கூறியுள்ளார்.

ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என். சீனிவாசன், சிஎஸ்கே பற்றி கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் எல்லா வீரர்களும் சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவிக்கிறார்கள். ரகசியம் எதுவுமில்லை. வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், டிரெய்னர்... என கடந்த 12, 13 வருடங்களாக யாரையும் நாங்கள் மாற்றவில்லை. ஆனால் மற்ற அணிகளைப் பாருங்கள். அவர்களுக்குப் பலவிதமான வெற்றிகள் கிடைத்துள்ளன. ஆனால் அவர்கள் பலரை மாற்றியுள்ளார்கள். திறமையானவர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எனவே அவர்களுடைய திறமையில் நம்பிக்கை வைக்கிறோம் என்றார். 

ADVERTISEMENT

Tags : CSK MS Dhoni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT