செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இங்கிலாந்து X1 அறிவிப்பு

30th Jun 2022 05:29 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இம்முறை பிர்மிங்கமில் ஜூலை 1 அன்று முதல் நடைபெறவுள்ளது.

5-வது டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டதால் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் இந்த டெஸ்டில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாடாத ஆண்டர்சன் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

ADVERTISEMENT

இங்கிலாந்து அணி

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் லீஸ், ஸாக் கிராவ்லி, போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ADVERTISEMENT
ADVERTISEMENT