டி20 தரவரிசையில் நெ.1 இடத்தை நீண்ட நாள் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில் நெ.1 இடத்தை பாபர் ஆஸம் மீண்டும் தக்கவைத்துள்ளார். இதையடுத்து விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 1,013 நாள்களுக்கு டி20யின் நெ.1 பேட்டராக விராட் கோலி இருந்தார். தற்போது அதை விடவும் அதிக நாள்களுக்கு நெ.1 இடத்தைத் தக்கவைத்துள்ளார் பாபர் ஆஸம். முதல் 10 இடங்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்களில் இஷான் கிஷன் மட்டும் இடம்பிடித்துள்ளார். அவர் 7-ம் இடத்தில் உள்ளார்.
டி20யில் மட்டுமல்லாமல் ஒருநாள் தரவரிசையிலும் பேட்டர்களில் நெ.1 இடத்தில் அவர் உள்ளார் பாபர் ஆஸம்.
ADVERTISEMENT