செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியல்

29th Jun 2022 01:56 PM

ADVERTISEMENT

 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தீபக் ஹூடா இணைந்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி.

டப்லினில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பெட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து அசத்தினார். சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கி 77 ரன்கள் எடுத்தார். 

ADVERTISEMENT

கடினமான இலக்கை அபாரமாக விரட்டிய அயர்லாந்து அணி, போராடித் தோற்றது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்களும் பால் ஸ்டிர்லிங் 40 ரன்களும் டெக்டர் 39 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தீபக் ஹூடா தேர்வானார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த 4-வது இந்திய வீரர் என்கிற பெருமையை தீபக் ஹூடா பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சதங்களை அடித்துள்ளார்கள்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்கள்

118 ரன்கள்: ரோஹித் சர்மா vs இலங்கை, 2017
111* ரன்கள்: ரோஹித் சர்மா vs மே.இ. தீவுகள், 2018
110* ரன்கள்: கே.எல். ராகுல் vs மே.இ. தீவுகள், 2016
106 ரன்கள்: ரோஹித் சர்மா vs தெ.ஆ., 2015
104 ரன்கள்: தீபக் ஹூடா vs அயர்லாந்து, 2022
101* ரன்கள்: கே.எல். ராகுல் vs இங்கிலாந்து, 2018
101 ரன்கள்: சுரேஷ் ரெய்னா vs தெ.ஆ., 2010
100* ரன்கள்: ரோஹித் சர்மா vs இங்கிலாந்து, 2018

Tags : Deepak Hooda
ADVERTISEMENT
ADVERTISEMENT