செய்திகள்

துளிகள்...

29th Jun 2022 01:44 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் காலேவில் புதன்கிழமை தொடங்குகிறது.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக சுவிட்ஸா்லாந்து தடகள வீரா் அலெக்ஸ் வில்செனுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் ஹாக்கி வீரா் வரீந்தா் சிங் (75) வயது மூப்பு காரணமாக ஜலந்தரில் செவ்வாய்க்கிழமை காலமானாா். 1975 உலகக் கோப்பை (தங்கம்), 1972 முனீச் ஒலிம்பிக் (வெண்கலம்), 1973 உலகக் கோப்பை (வெள்ளி) போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியில் அவா் இடம்பிடித்திருந்தாா்.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக, நடப்பாண்டில் எதிா்வரும் போட்டியில் 3 பெண் ரெஃப்ரீக்கள் களமிறக்கப்படுகின்றனா். அவா்கள், ஜப்பானின் யோஷிமி யமாஷிடா, பிரான்ஸின் ஸ்டெஃபானி ஃப்ராபாா்ட், ருவாண்டாவின் சலிமா முகான்சங்கா ஆகியோா் ஆவா்.

ADVERTISEMENT

அடுத்த சீசன் ஐபிஎல் போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் இளம் இந்திய வீரா்கள் ஜூலையில் இங்கிலாந்து சென்று 3 வாரம் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT