செய்திகள்

அதிரடி ஆட்டத்தில் இருந்து மாறப்போவதில்லை: பென் ஸ்டோக்ஸ்

28th Jun 2022 06:25 PM

ADVERTISEMENT

 

கடைசி மூன்று போட்டிகளில் விளையாடிய அதே மனநிலையில்தான் இனிவரும் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவோம் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் மெக்குல்லம், புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற்ள்ளனர். அடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவுடன் ஜூலை 1 முதல் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

எதிரணியினர் யாராக இருந்தாலும் எங்களது இந்த அதிரடியான ஆட்டத்தை மாற்றப்போவதில்லை. ஆடுகளம், எதிரணியினர் என எல்லாமே புதியாக இருந்தாலும் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடிய அதே மனநிலையில்தான் இனிவரும் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவோம். இந்தியாவுக்கு எதிராகவும் அப்படியேதான் விளையாடுவோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT