செய்திகள்

அப்பா எப்படி இருக்கிறார்?: ரோஹித் சர்மாவின் மகள் அளித்த பதில் (விடியோ)

28th Jun 2022 04:20 PM

ADVERTISEMENT

 

தனது தந்தையைப் பற்றி விசாரித்த நிருபர்களிடம் பொறுப்பாகப் பதிலளித்த ரோஹித் சர்மா மகளின் விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. பிர்மிங்கமில் ஜூலை 1 அன்று டெஸ்ட் தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிர்மிங்கம் டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக 31 வயது மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ரோஹித் சர்மாவின் மூன்று வயது மகள் சமைரா சர்மாவின் விடியோ ஒன்று அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

லீசெஸ்டரில் இந்திய அணி தங்கியிருக்கும் ஹோட்டலில் நிருபர்கள் சிலர் கேட்ட கேள்விக்கு அழகாகப் பதிலளித்துள்ளார் சமைரா. 

ரோஹித்தின் மனைவி ரித்திகாவும் அவர் மகள் சமைராவும் ஹோட்டலில் நடந்து சென்றபோது நிருபர்கள் சிலர் சமைராவிடம் சில கேள்விகள் கேட்டார்கள். உன் அப்பா எப்படி இருக்கிறார் என்கிற கேள்விக்கு, அப்பாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அவர் அறையில் உள்ளார் என்று பதிலளித்து பிறகு தன் அம்மாவுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தார் சமைரா. தன்னிடம் கேட்ட கேள்விக்கு பொறுப்புடன் பதிலளித்துச் சென்ற சமைராவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
 

 

Tags : Rohit Sharma
ADVERTISEMENT
ADVERTISEMENT