செய்திகள்

இயான் மார்கன் சாதித்தது என்ன?

28th Jun 2022 09:32 PM

ADVERTISEMENT


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் இயான் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

மோசமான ஃபார்ம் மற்றும் காயங்கள் காரணமாக அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், மார்கன் ஓய்வு பெற்றதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

இயான் மார்கன் படைத்த சாதனைகள்:

  • இங்கிலாந்துக்காக அதிக ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் - 225
  • இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் - 6,957
  • இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 202
  • இங்கிலாந்துக்காக அதிக சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியவர் - 115
  • இங்கிலாந்துக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் - 2,458
  • இங்கிலாந்துக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 120

இதையும் படிக்கஇங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஓய்வு!

ADVERTISEMENT

2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதன்பிறகு, அலெஸ்டர் குக்கிடமிருந்த கேப்டன் பொறுப்பு இயான் மார்கனிடம் வழங்கப்பட்டது. அதிரடியும் ஆக்ரோஷமும் என இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் முகத்தையே மாற்றினார் மார்கன். 

  • ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார். 
  • 2019-இல் உலகக் கோப்பையை வென்றுத் தந்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியால் 498 ரன்கள் விளாச முடிகிறது என்றால், இதற்கு விதை போட்டவர் இயான் மார்கன்.

Tags : Eoin Morgan
ADVERTISEMENT
ADVERTISEMENT