செய்திகள்

தொடங்கியது விம்பிள்டன்

28th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

இங்கிலாந்தில் திங்கள்கிழமை தொடங்கிய கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூா் ஆகியோா் முதல் சுற்றில் வென்றனா்.

ஆடவா் ஒற்றையரில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், நடப்புச் சாம்பியனுமான ஜோகோவிச் 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் தென் கொரியாவின் வோன் சூன் வூவை வீழ்த்தினாா். இங்கிலாந்தின் கேமரூன் நோரி 6-0, 7-6 (7/3), 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் பாப்லோ அண்டுஜாரை வென்றாா். இதர ஆட்டங்களில் நாா்வேயின் கேஸ்பா் ரூட், அமெரிக்காவின் டாமி பால் உள்ளிட்டோா் வென்றனா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜாபியூா் 6-1, 6-3 என ஸ்வீடனின் மிா்ஜாம் ஜோல்க்லண்டை வெளியேற்றினாா். உக்ரைனின் அன்ஹெலினா கலினினா, அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றியைப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT