செய்திகள்

உம்ரான் மாலிக்கின் டி20 அறிமுகம் எப்படி?: பாண்டியா கருத்து

27th Jun 2022 03:07 PM

ADVERTISEMENT

 

உம்ரான் மாலிக்கின் டி20 அறிமுகம் பற்றி இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். 

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அயர்லாந்துக்கு எதிரான இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. டப்லினில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 12  ஓவர்கள் வழங்கப்பட்டன. டாஸ் வென்ற பாண்டியா தலைமையிலான இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. உம்ரான் மாலிக் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அயர்லாந்து அணி, 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உம்ரான் மாலிக் ஒரு ஓவர் வீசி 14 ரன்கள் கொடுத்தார். இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாகப் பந்துவீசிய சஹால், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்திய அணிக்காக முதல்முறையாக விளையாடிய உம்ரான் மாலிக் பற்றி கேப்டன் பாண்டியா கூறியதாவது:

ADVERTISEMENT

இந்தியாவுக்காக ஒரு வீரர் அறிமுகமாகும்போது அவர் முழுத்திறமையை வெளிப்படுத்த அவகாசம் அளிக்க வேண்டும். அவருடைய முதல் ஆட்டம் சரியாக அமைந்ததா இல்லையா என்பது அவசியமில்லை. இந்திய அணிக்காக விளையாடுவதென்பது உம்ரான் மாலிக்குக்குப் பெரிய விஷயம். எல்லோருக்கும் தான். அவர் தன்னுடைய முதல் வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் என விரும்பினேன். இந்த வாய்ப்பு எப்போதும் வராது. ஒருமுறை தான் அறிமுகமாக முடியும் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT