செய்திகள்

அயர்லாந்து வீரருக்கு ஐபிஎல் ஒப்பந்தம்: பாண்டியா விருப்பம்

DIN

இளம் அயர்லாந்து வீரர் ஹேரி டெக்டர் தொடர்ந்து நன்றாக விளையாடி ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு பெற வேண்டும் என இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா வாழ்த்தியுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அயர்லாந்துக்கு எதிரான இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. டப்லினில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 12  ஓவர்கள் வழங்கப்பட்டன. டாஸ் வென்ற பாண்டியா தலைமையிலான இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. உம்ரான் மாலிக் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அயர்லாந்து அணி, 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உம்ரான் மாலிக் ஒரு ஓவர் வீசி 14 ரன்கள் கொடுத்தார். இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாகப் பந்துவீசிய சஹால், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்நிலையில் சிறப்பாக விளையாடிய ஹேரி டெக்டர் பற்றி பாண்டியா கூறியதாவது:

அவர் அற்புதமான ஷாட்களை விளையாடினார். ஹேரி டெகருக்கு 22 வயது தான் ஆகிறது. நான் அவருக்கு என்னுடைய பேட்டைத் தந்துள்ளேன். இதனால் அவர் மேலும் சிக்ஸர்கள் அடித்து ஐபிஎல் ஒப்பந்தம் பெறட்டும். அவருக்கு என் வாழ்த்துகள். அவரை நன்குக் கவனித்து, சரியாக வழிநடத்த வேண்டும். கிரிக்கெட்டை மட்டுமல்ல, கிரிக்கெட் வாழ்க்கையின் உண்டாகும் சூழல்கள் என அனைத்தையும் அவர் புரிந்துகொள்ள வழி செய்ய வேண்டும். அதை அவர் புரிந்துகொண்டால் நீண்ட நாள் விளையாடுவார். ஐபிஎல் போட்டியில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் அவர் விளையாடலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

SCROLL FOR NEXT