செய்திகள்

இந்தியாவின் நெ.1: ஆறு முறை ரஞ்சி கோப்பையை வென்ற பயிற்சியாளர் பண்டிட்

DIN

ஆறு முறை ரஞ்சி கோப்பைப் போட்டியை வென்று இந்தியாவின் நெ.1 பயிற்சியாளராக அனைவராலும் பாராட்டப்படுகிறார் சந்திரகாந்த் பண்டிட். 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. 

41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை மத்தியப் பிரதேச அணி வெல்ல முக்கியக் காரணம் - பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் (60). 

இந்திய அணிக்காக 5 டெஸ்டுகளும் 36 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியவர் பண்டிட். ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை, மத்தியப் பிரதேச அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

கரோனாவுக்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியில் பண்டிட் பயிற்சியளித்த நான்கு வருடங்களிலும் அவருடைய அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன. அதில் மூன்று முறை கோப்பையைத் தட்டிச் சென்றன. 

2017-18, 2018-19 ஆண்டுகளில் விதர்பா அணி அடுத்தடுத்து ரஞ்சி கோப்பைகளை வென்றது. அந்த இரு வருடங்களிலும் 22 ஆட்டங்களில் விதர்பா அணி ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை. அப்போதே பண்டிட் வெகுவாகப் பாராட்டப்பட்டார். இப்போது மத்தியப் பிரதேச அணி சாம்பியனாகி பண்டிட்டுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. 

பண்டிட் பயிற்சியளித்து ஆறு முறை அணிகள் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளன. மும்பை மூன்று முறையும் விதர்பா இருமுறையும் ம.பி. ஒருமுறையும் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளன. இதனால் தான் ரஞ்சி கோப்பையை வென்றதற்காக மத்தியப் பிரதேச அணியைப் பாராட்டும் சச்சின், ரவி சாஸ்திரி, அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற பிரபலங்கள் அனைவரும் மறக்காமல் பண்டிட்டுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். இதனால் இந்தியாவின் நெ.1 பயிற்சியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார் பண்டிட். 

சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியில் ரஞ்சி கோப்பையை வென்ற அணிகள்

2002-03: மும்பை
2003-04: மும்பை
2015-16: மும்பை
2017-18: விதர்பா
2018-19: விதர்பா
2021-22: மத்தியப் பிரதேசம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT