செய்திகள்

‘உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக மாறுவோம்’- ஆஸ்திரேலியாவின் சுழல் பந்து வீச்சாளர் நம்பிக்கை

27th Jun 2022 04:44 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியா அணி  உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக மாறும் என அந்நாட்டின் சுழல் பந்து வீரர் நாதன் லயன் நம்பிகைத் தெரிவித்துள்ளார். 

இலங்கை அணியிடம் 3-2 என்ற கனக்கில் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா நாளை (ஜீன் 28) முதல் பாட் கம்மின்ஸ் தலைமையில் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி  முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் டெஸ்ட் போட்டிக் குறித்து நாதன் லயன் கூறியதாவது: 

ADVERTISEMENT

டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாதான் சிறந்த அணியாக விளங்கும். சொல்வதற்கு திமிராக இருந்தாலும் இதுதான் உண்மை. உண்மையிலேயே நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள். ஏனெனில் அந்தளவுக்கு திறமை உள்ளது. மேலும் அதற்காக கடினமாக உழைத்து வருகிறோம். சிறந்த அணியாக மாறுவதற்கான பயணத்தில்தான் தற்போது இருக்கிறோம். அதுவே எங்களது அணியின் நோக்கமும்கூட. 

இதையும் படிக்க: இந்தியாவின் நெ.1: ஆறு முறை ரஞ்சி கோப்பையை வென்ற பயிற்சியாளர் பண்டிட்

ADVERTISEMENT
ADVERTISEMENT