செய்திகள்

உலக வில்வித்தை: அபிஷேக்/ஜோதி இணைக்கு தங்கம்

26th Jun 2022 12:43 AM

ADVERTISEMENT

பிரான்ஸில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா இணை தங்கப் பதக்கம் வென்றது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் களம் கண்ட இந்த இருவா் இணை, இறுதிச்சுற்றில் பிரான்ஸின் ஜீன் பௌல்ச்/சோஃபி டோட்மான்ட் கூட்டணியை 152-149 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

உலகக் கோப்பை போட்டியில் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பாகவும் இதே பிரிவில் அபிஷேக்/ஜோதி இணை சில முறை வெண்கலப் பதக்கமும், அதிகபட்சமாக கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஜோதிக்கு மேலும் ஒரு பதக்கம்: காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில் ஜோதி சுரேகா வெள்ளிப் பதக்கம் வென்றாா். முன்னதாக அவரும், இங்கிலாந்தின் எல்லா கிப்சனும் மோதிய இறுதிச்சுற்று 148-148 என சமநிலையை அடைந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட 10 ஷாட்டில் கிப்சன் வென்றாா். ஜோதிக்கு 2-ஆம் இடம் கிடைத்தது.

ADVERTISEMENT

முன்னதாக, இப்போட்டியில் ஏற்கெனவே ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கௌா் ஆகியோா் கூட்டணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவா்களுக்கான இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT