செய்திகள்

ரஞ்சி கோப்பையின் தொடர் நாயகன் விருது: சர்ஃபராஸ் கான்

26th Jun 2022 07:05 PM

ADVERTISEMENT

 

ரஞ்சி கோப்பை 2022 போட்டியின் தொடர் நாயகன் விருதினை மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் பெற்றுள்ளார். 

இவ்வாண்டு ரஞ்சி கோப்பை போட்டி சுவாரசியமாக நடந்து முடிந்ததுள்ளது. 41 முறை கோப்பை வென்ற வலுவான மும்பை அணியை ஒரு முறைக்கூட கோப்பை வெல்லாத மத்திய பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனையைப் படைத்துள்ளது. 

இதையும் படிக்க: 88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்று மத்திய பிரதேச அணி சாதனை

ADVERTISEMENT

இந்த தொடரில் மும்பை அணி இறுதிப்போட்டியில் தோல்வியுற்றாலும் அந்த அணியைச் சார்ந்த சர்ஃபராஸ் கான் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருதினைப் பெற்றுள்ளார். 982 ரன்களை எடுத்தார். இதில் 4 சதங்கள், 2 அரை சதங்கள் உடன் 19 சிக்ஸர்கள், 93 பவுண்டரிகள் அடக்கம். அதிகபட்ச ரன் 275. சராசரி 122.25 ஆகும்.  

2022 ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்: 

1. சர்ஃபராஸ் கான் (மும்பை)  982 ரன்கள் 

2. ரஜத் பட்டிதார் (ம.பி)              658 ரன்கள் 

3. சேதன் பிஸ்ட் (நாகலாந்து) 623 ரன்கள்

4. யாஸ் தூபே (ம.பி)                 614 ரன்கள் 

5. சுபம் சர்மா (ம.பி)                   608 ரன்கள் 

இதையும் படிக்க: 35 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகும் வேகப்பந்து வீச்சாளர்?

ADVERTISEMENT
ADVERTISEMENT