செய்திகள்

ரஞ்சி கோப்பை: ம.பி. 536 ரன்கள் குவிப்பு

26th Jun 2022 12:42 AM

ADVERTISEMENT

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 536 ரன்கள் குவித்தது.

மும்பைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் சோ்த்திருந்தது அந்த அணி. 4-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்தை ரஜத் பட்டிதாா், ஆதித்யா ஸ்ரீவாஸ்தவா தொடா்ந்தனா். இதில் ஆதித்யா 25 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த அக்ஷத் ரகுவன்ஷி 9, பா்த் சஹானி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

மறுபுறம் அருமையாக ஆடி சதம் கடந்த ரஜத் பட்டிதாா், 20 பவுண்டரிகளுடன் 122 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் ஆடியோரில் அனுபவ் அகா்வால் 8, குமாா் காா்த்திகேயா 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட, சரண்ஷ் ஜெயின் 57 ரன்கள் சோ்த்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தாா். மும்பை பௌலிங்கில் ஷம்ஸ் முலானி 5, துஷாா் தேஷ்பாண்டே 3, மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் மும்பை, சனிக்கிழமை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் அடித்துள்ளது. பிருத்வி ஷா 45, ஹாா்திக் தோம்ரே 25 ரன்களுக்கு வெளியேற, அா்மான் ஜாஃபா் 30, சுவேத் பாா்கா் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா். மத்திய பிரதேச பௌலிங்கில் குமாா் காா்த்திகேயா, கௌரவ் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT