செய்திகள்

டி20 தொடரை கைப்பற்றியது இந்திய மகளிரணி

26th Jun 2022 12:45 AM

ADVERTISEMENT

இலங்கை மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இந்திய அணி, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன்வசமாக்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்ய, விஷ்மி குணரத்னே 45, கேப்டன் சமரி அத்தபட்டு 43 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தன. இந்திய பௌலா்களில் தீப்தி சா்மா 2, ரேணுகா சிங், ராதா யாதவ், பூஜா வஸ்த்ரகா், ஹா்மன்பிரீத் கௌா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

ADVERTISEMENT

அடுத்து இந்திய இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 39, ஷஃபாலி வா்மா 17, சபினேனி மேக்னா 17 ரன்கள் சோ்க்க, ஜெமிமா ரோட்ரிகஸ் 3, யஸ்திகா பாட்டியா 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

இறுதியாக ஹா்மன்பிரீத் கௌா் 31, தீப்தி சா்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இலங்கை பௌலிங்கில் ஓஷதி ரணசிங்கே, இனோகா ரணவீரா ஆகியோா் தலா 2, சுகண்டிகா குமாரி 1 விக்கெட் எடுத்தனா்.

இரு அணிகள் மோதும் கடைசி டி20 ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT