செய்திகள்

88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்று மத்திய பிரதேச அணி சாதனை

26th Jun 2022 03:10 PM

ADVERTISEMENT

 

88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது மத்திய பிரதேச அணி. 

மும்பை முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தது. மத்திய பிரதேச அணி 536 ரன்களை குவித்தது. 

இரண்டாம் இன்னிங்ஸில் மும்பை 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரித்வி ஷா 44 ரன்கள், சர்பராஸ் கான் 45 ரன்கள், சுவேத் பார்கர் 51 ரன்களும் எடுத்தனர். ம.பி. அணியில் அபாரமாக பந்து வீசிய குமார் கார்த்திகேயா 4 விகெட்டுகளை எடுத்தார். கௌரவ் யாதவ், பார்த் சஹானி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

ADVERTISEMENT

இரண்டாம் இன்னிங்ஸில் ம.பி. அணிக்கு 108 ரன்கள் தேவைப்பட்டது. ஹிமன்ஹு மந்த்ரி 37 ரன்கள், சுபம் சர்மா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஜத் பட்டிதார் ஆட்டமிழக்காமல் 30 ரன்களுடன் அணியை வெற்றிப் பெற செய்தார். 

முதல் இன்னிங்ஸில் 116 & இரண்டாம் இன்னிங்ஸில் 30 ரன்களும் எடுத்த சுபம் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருதை வென்றார். மும்மை அணியை சேர்ந்த சர்பராஸ் கான் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார்.  

இவ்வெற்றியின் மூலம் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி முதன் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று ம.பி. அணி சாதனைப் படைத்துள்ளது. 

இதையும் படிக்க: 35 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகும் வேகப்பந்து வீச்சாளர்?

ADVERTISEMENT
ADVERTISEMENT