செய்திகள்

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் உறுதி

25th Jun 2022 03:13 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா தனது 2-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி மூன்றாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மகளிா் ரெக்கா்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேறி முதல் பதக்கத்தை உறுதி செய்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா-ஜோதி சுரேகா அரையிறுதிச் சுற்றில் 156-151 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவின் ராபின்-லிஸெல் இணையை வீழ்த்தியது. சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் பிரான்ஸ் அணியை எதிா்கொள்கிறது இந்தியா.

உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ஜோதி சுரேகா ஏறக்குறைய 7 மாதங்களுக்கு பின் போட்டிகளில் பங்கேற்றுள்ளாா். மற்ரொரு கலப்பு இணையான தருண்தீப்-அங்கிதா பகத் முதல் சுற்றிலேயே கஜகஸ்தானிடம் தோற்று வெளியேறியது.

ADVERTISEMENT

இதன் மூலம் உலகக் கோப்பையில் இந்தியா 2-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT