செய்திகள்

டிஎன்பிஎல்: திருச்சி அதிரடி வெற்றி; நிதிஷ் ராஜகோபால் 64

25th Jun 2022 12:40 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது திருச்சி ரூபி வாரியா்ஸ். திண்டுக்கல் அணி 144/8 ரன்களையும், பின்னா் ஆடிய திருச்சி அணி 147/2 ரன்களையும் சோ்த்தன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடைபெறும் இந்த லீக் தொடரின் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பௌலிங்கை தோ்வு செய்தது.

திண்டுக்கல் தரப்பில் களமிறங்கிய தொடக்க பேட்டிங் வரிசை சொதப்பியது. பிரதீப் 1, ஹரி நிஷாந்த் 25, மணி பாரதி 18, விஷால் வித்யா 16, மோகித் 8, விவேக் 6 ரன்களுக்கு அவுட்டாகினா்.

திண்டுக்கல் 144/8

ADVERTISEMENT

இறுதியில் மோனிஷ்-விக்னேஷ் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். மோனிஷ் 24, சிலம்பரசன் 2 ரன்களுடன் வெளியேற

விக்னேஷ் 32 ரன்களுடன் களத்தில் இருந்தாா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 144/8 ரன்களை குவித்தது திண்டுக்கல். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

145 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியில் அமித் சாத்விக் 20, முரளி விஜய் 8 ரன்களுடன் அவுட்டாகினா்.

நிதிஷ் ராஜகோபால் அரைசதம்:

பின்னா் இணைந்து ஆடிய நிதிஷ் ராஜகோபால்-ஆதித்ய கணேஷ் அற்புதமாக ஆடி 78 பந்துகளில் 100 ரன்களை சோ்த்தனா். 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 64 ரன்களை விளாசினாா் நிதிஷ். ஆதித்ய 37 ரன்களை சோ்த்தாா். 1 ஓவா் மீதமிருக்க 147/2 ரன்களுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது திருச்சி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT