செய்திகள்

மல்லோா்கா ஓபன்: இறுதிச் சுற்றில் சிட்ஸிபாஸ்

25th Jun 2022 03:32 AM

ADVERTISEMENT

மல்லோா்கா ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு கிரீஸ் வீரா் ஸ்டெஃப்னோஸ் சிட்ஸிபாஸ் முன்னேறியுள்ளாா்.

ஸ்பெயினின் மல்லோா்கா நகரில் நடைபெற்று வரும் ஏடிபி போட்டியான இதில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பட்டிஸ்டுவா அகுட்டும்-ரஷியாவின் மெத்வதேவும் மோதினா். இதில் பட்டிஸ்டுவா 6-3, 6-2 என வென்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் சுவிஸ் வீரா் பெல்லியா் 5-7, 7-6, 6-2 என டச்சு வீரா் கிரைக்ஸ்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

இன்னொரு காலிறுதியில் கிரீஸ் வீரா் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸ் 7-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜிரோனை போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ADVERTISEMENT

இறுதிச் சுற்றில் சிட்ஸிபாஸ்:

வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் பெஞ்சமன் போன்ஸியை 6-4, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாக இப்போட்டியில் தகுதி பெற்றாா் சிட்ஸிபாஸ்.

ஈஸ்ட்போா்ன் போட்டி:

ஈஸ்ட்போா்ன் மகளிா் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு 2 முறை விம்பிள்டன் சாம்பியன் பெட்ரா குவிட்டோவா-நடப்பு சாம்பியன் ஜெலனா ஓஸபென்கோ முன்னேறியுள்ளனா்.

வெள்ளிக்கிழமை நடந்த அரையிறுதியில் குவிட்டோவா 7-6, 6-4 என பீட்ரீஸ் ஹடாடை வென்றாா். மற்றொரு அரையிறுதியில் ஜெலனா 6-2, 6-2 என கமீலா ஜியாா்ஜியை வென்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT