செய்திகள்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

25th Jun 2022 05:06 PM

ADVERTISEMENT

 

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய மகளிர் அணி.

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடங்கியது.  அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது. 

முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது டி20 ஆட்டம் டம்புல்லாவில் இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT

டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை விஷ்மி 45, கேப்டன் சமரி 43 ரன்கள் எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்த இலங்கை அணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். இதனால் இலங்கை அணி பேட்டர்களில் விஷ்மி, சமரியைத் தவிர வேறு யாராலும் இரட்டை இலக்க ரன்களை எடுக்க முடியவில்லை. தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்திய அணிக்கு மந்தனா நல்ல தொடக்கத்தை அளித்தார். 8 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா, மேக்னா தலா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதிக்கட்டத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கவனமுடன் விளையாடி 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT