செய்திகள்

‘எனக்கும் உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனத் தோன்றியது’- 1983 உலக கோப்பை நினைவுகள் குறித்து சச்சின் கருத்து

25th Jun 2022 01:14 PM

ADVERTISEMENT

 

1983 கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வென்றபோது தனக்கும் உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்ற ஆசைப் பிறந்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 

கபில் தேவ் தலைமையில் 1983இல் இந்தியா அணி ஒருநாள் போட்டிகளில் தனது முதல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. 

1975, 1979 ஆம் ஆண்டு மே.இ. தீவுகள் அணி உலக கோப்பையை வென்று வலுவான அணியாக இருந்தது. 1983ஆம் ஆண்டு மே.இ.தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இறுதிப்போட்டி நடைப் பெற்றது. 

ADVERTISEMENT

இப்போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் கிரிஸ் ஸ்ரீகாந்த் 38 ரன்களும் அமர்நாத் 26 ரன்களும், சந்தூப் பாடில் 27 ரன்களும் கபில் தேவ் 15 ரன்களும் எடுத்தனர். அப்போதெல்லாம் ஒருநாள் போட்டி 60 ஓவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 52 ஓவரில் 140க்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

அதற்குப் பிறகு தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

“சில கணங்கள்தான் வாழ்க்கையில் நமக்கான கனவையும் ஊக்கத்தையும் தரும். 1983, நாம் முதல் முறையாக உலக கோப்பையை வென்றோம். அப்போது எனக்கும் உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனத் தோன்றியது” என இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க: ஓர் ஆட்டத்திலும் விளையாடாத இந்திய வீரர் யார்?: ஆச்சர்யப்படுத்தும் 1983 உலகக் கோப்பை புள்ளிவிவரங்கள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT