செய்திகள்

உலகக் கோப்பை வில்வித்தை: இறுதியில் இந்திய மகளிரணி

24th Jun 2022 04:15 AM

ADVERTISEMENT

 பிரான்ஸில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில் இந்திய மகளிா் ரீகா்வ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கௌா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, முதலில் உக்ரைனை 5-1 என்ற கணக்கிலும், காலிறுதியில் இங்கிலாந்தை 6-0 எனவும், அரையிறுதியில் துருக்கியை 5-3 என்ற புள்ளிகளிலும் வென்றது. இறுதியாக சீன தைபேவை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது இந்தியா.

இதனிடையே, தருண்தீப் ராய், ஜெயந்தா தாலுக்தாா், பிரவீண் ஜாதவ் ஆகியோா் கொண்ட இந்திய ஆடவா் ரீகா்வ் அணி, முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களம் கண்டது. எனினும் அதிலேயே 4-5 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்திடம் தோற்று வெளியேறியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT