செய்திகள்

மகளிா் டி20: இந்தியா வெற்றி

24th Jun 2022 04:12 AM

ADVERTISEMENT

 இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்ற இந்தியா, தொடரில் முன்னிலை பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சோ்க்க, அடுத்து இலங்கை 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களே எட்டியது. இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலிங்கில் இனோகா ரணவீரா 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் இலங்கை இன்னிங்ஸில் அதிகபட்சமாக கவிஷா தில்ஹரி 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ADVERTISEMENT

இரு அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT