செய்திகள்

டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் சர்ஃபராஸ் கான்

24th Jun 2022 06:17 PM

ADVERTISEMENT

 


டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள ஒரு பட்டியலில் ஒரு மும்பை வீரர், அதுவும் இந்திய அணிக்கு இன்னும் தேர்வாகாத ஒரு வீரர் இடம்பெற்றால் அதை விட பெருமைக்குரிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?

பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதி வருகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெயிஸ்வால் 78, சர்ஃபராஸ் கான் 134 ரன்கள் எடுத்தார்கள். கெளரவ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 937 ரன்கள் எடுத்துள்ளார் சர்ஃபராஸ் கான். இதற்கு முன்பு 2019-20 ரஞ்சி கோப்பைப் போட்டியிலும் 900+ ரன்கள் எடுத்தார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் சர்ஃபராஸ் கான் உள்பட இதுவரை 3 பேட்டர் மட்டுமே இருமுறை 900 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள். 

ADVERTISEMENT

முதல்தர கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 2000+ ரன்கள் எடுத்த வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி கொண்டவராக பிராட்மேன் உள்ளார். அடுத்த இடத்தில் உள்ளவர் சர்ஃபராஸ் கான். 25 ஆட்டங்களில் 2485 ரன்களுடன் 82.83 சராசரி ரன்கள் வைத்துள்ளார். பிராட்மேனின் சராசரி - 95.14. 

முதல்தர கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி (குறைந்தது 2000 ரன்கள்)

பிராட்மேன் - 234 ஆட்டங்கள் - 28,067 ரன்கள் - 95.14 சராசரி 
சர்ஃபராஸ் கான் - 25 ஆட்டங்கள் - 2,485 ரன்கள் - 82.83 சராசரி
விஜய் மெர்சண்ட் - 150 ஆட்டங்கள் - 13,470 ரன்கள் - 71.64 சராசரி

Tags : Sarfaraz Khan
ADVERTISEMENT
ADVERTISEMENT