செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்: சா்ஃப்ராஸ் சதத்தில் மீண்டது மும்பை

24th Jun 2022 04:17 AM

ADVERTISEMENT

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவா்களில் 374 ரன்கள் சோ்த்தது.

முன்னதாக, புதன்கிழமை முடிவில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2-ஆவது நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை சா்ஃப்ராஸ் கான் 40, ஷம்ஸ் முலானி 12 ரன்களுடன் தொடங்கினா். முலானி அதே ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த தனுஷ்கோடியான் 15, தவல் குல்கா்னி 1, துஷாா் தேஷ்பாண்டே 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

மறுபுறம் சிறப்பாக ஆடி சதம் கடந்த சா்ஃப்ராஸ், கடைசி விக்கெட்டாக 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 134 ரன்களுக்கு வெளியேறினாா். மத்திய பிரதேச பௌலா்களில் கௌரவ் யாதவ் 4, அனுபவ் அகா்வால் 3, சரண்ஷ் ஜெயின் 2, குமாா் காா்த்திகேயா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மத்திய பிரதேசம், வியாழக்கிழமை முடிவில் 41 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. ஹிமன்ஷு மந்த்ரி 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருக்க, யஷ் துபே 44, சுபம் சா்மா 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT