செய்திகள்

இரு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விளையாடும் முரளி விஜய்: காரணம் என்ன?

DIN

2020 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் 38 வயது முரளி விஜய். அதன்பிறகு அவர் வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடந்த வருட டிஎன்பிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் விளையாடவில்லை. 

இந்நிலையில் டிஎன்பிஎல் டி20 லீக் போட்டியில் விளையாடுவதன் மூலம் கிட்டத்தட்ட இரு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆடுகளத்துக்குத் திரும்புகிறார் முரளி விஜய். 

நீண்ட காலம் விளையாட நினைக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இரு வருடங்களுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டேன். சிறிய குழந்தைகள் கொண்ட குடும்பம் எனக்கு உண்டு. அவர்களை கவனித்துக்கொள்ள விரும்பினேன். இப்போது கிரிக்கெட் போட்டியில் நல்ல உடற்தகுதியுடன் விளையாட ஆர்வமாக உள்ளேன். டிஎன்பிஎல் போட்டியில் என் அணிக்காக நல்லவிதத்தில் பங்களிப்பேன் என நினைக்கிறேன் என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார் முரளி விஜய். 

முன்பு விளையாட நினைத்தேன். ஆனால் காயம் ஏற்பட்டு விட்டது. அது கடினமாக இருந்தது. என் தனிப்பட்ட வாழ்க்கை வேகமாகச் சென்றதால் அதைக் கொஞ்சம் நிறுத்தி ஆய்வு செய்ய நினைத்தேன். அதனால் தான் ஓய்வு எடுத்துக்கொண்டேன். என் நிலைமையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புரிந்துகொண்டு டிஎன்பிஎல் போட்டியில் என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்துள்ளது. நம் இலக்கில் உண்மையாக இருக்கவேண்டும். தற்போது எனக்கு எந்த இலக்கும் இல்லை. என் வாழ்க்கையின் இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவுள்ளேன். அது என்னை எங்குக் கொண்டு செல்லும் என்று பார்க்கலாம் என்று மேலும் அவர் கூறினார். 

இந்திய அணிக்காக 2018 பெர்த் டெஸ்டிலும் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சியில் டிசம்பர் 2019-லும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்காக செப்டம்பர் 2020-லும் கடைசியாக விளையாடினார் முரளி விஜய். டிஎன்பிஎல் 2022 போட்டியில் ரஹில் ஷா தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் முரளி விஜய் இடம்பெற்றுள்ளார். இந்த அணி கடந்த வருடம் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT