செய்திகள்

அட, இப்படி கூட ஒருவர் அவுட் ஆக முடியுமா? (விடியோ)

DIN


எதிர்முனையில் இருக்கும் சக பேட்டர் எந்த விதத்திலாவது ஒரு பேட்டர் ஆட்டமிழப்பதற்குக் காரணமாக முடியுமா?

ரன் அவுட் செய்யலாம். ஆனால் கேட்ச்சால் ஆட்டமிழப்பதற்கு?

இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்டில் நடைபெற்றுள்ளது.

லீட்ஸில் நடைபெறும் 3-வது டெஸ்டில் முதல் நாளன்று நியூசிலாந்து அணி, 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. மிட்செல் 78, பிளண்டல் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ஹென்றி நிகோல்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எப்படித் தெரியுமா?

சுழற்பந்து வீச்சாளர் லீச் வீசிய பந்தை அவர் அடிக்க, பந்து நேராக எதிர்முனையில் இருந்த சக பேட்டர் மிட்செல் பக்கம் வேகமாகச் சென்றது. தன்னை நோக்கி பந்து வந்ததால் அதற்கு வழிவிட பேட்டைத் தூக்கினார் மிட்செல். ஆனால் அந்தப் பந்து எதிர்பாராதவிதமாக மிட்செல்லின் பேட்டில் பட்டு பிறகு மிட் ஆஃப் பகுதியில் நின்றுகொண்டிருந்த லீஸிடம் கேட்ச் ஆக மாறியது. எங்கு அடித்த பந்து கடைசியில் எங்குச் சென்று சேர்ந்தது பாருங்கள்!

இப்படி இன்னொரு பேட்டரின் பேட்டில் பந்து பட்டு அதைக் கேட்ச் பிடித்தால் அது அவுட் தானா?

எம்சிசி விதிமுறைகளின் படி ஒரு பேட்டர் அடித்த பந்து - நடுவர், ஃபீல்டர், எதிர்முனையில் உள்ள பேட்டர் மீது பட்டு அதை கேட்ச் பிடித்தால் அது அவுட் தான். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT