செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடத் தயாராகும் வாஷிங்டன் சுந்தர்

21st Jun 2022 05:41 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் காயமடைந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தற்போது குணமாகிவிட்டதால் விரைவில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் ரூ. 8.75 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஐபிஎல் 2022 போட்டியில் இருமுறை அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் 9 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய வாஷிங்டன், 6 விக்கெட்டுகளும் 101 ரன்களும் எடுத்தார். பந்துவீச்சில் எகானமி - 8.54.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயம் காரணமாக தீபக் சஹார், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். 

ADVERTISEMENT

காயத்திலிருந்து குணமாகிவிட்ட வாஷிங்டன் சுந்தர், தற்போது பயிற்சிக்காக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார். அங்குள்ள லான்கஷைர் கவுன்டி அணிக்காக சிவப்புப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கவுன்டி ஆட்டங்களில் விளையாடி முழு உடற்தகுதியை நிரூபித்த பிறகே இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக முடியும் என்பதால் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT