செய்திகள்

கே.எல். ராகுலுக்கு காயம் குணமாகிவிட்டதா?

21st Jun 2022 12:46 PM

ADVERTISEMENT

 

இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயத்திலிருந்து குணமாகி வரும் புகைப்படம் ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றுள்ளது.

கே.எல். ராகுல் 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2547 ரன்கள் 7 சதத்துடன் 35.37 சராசரியும் வைத்துள்ளார். 42 ஒருநாள் போட்டியில் விளையாடி 1634 ரன்களும் 46.68 சராசரியும் வைத்துள்ளார். 56 டி20 போட்டிகளில் விளையாடி 1831 ரன்களுடன் 40.68 சராசரியுடன் 142.49 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக கே.எல். ராகுல்  நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: 30 ஆண்டுகளுக்கு பின்...சொந்த மண்ணில் மீண்டும் வரலாறு படைக்குமா இலங்கை?

தற்போது இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி விளையாட  இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. கே.எல். ராகுல் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி எடுத்து வருகிறார். இன்னும் முழுமையாக குணமடையாததால் என்சிஏ மருத்துவக்குழுவின் அறிவுரையின்படி அவரால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கே.எல். ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில், “உங்களது ஆசிர்வாதங்களைத்  தொடர்ந்து வழங்குங்கள்” எனக் கூறி புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT