செய்திகள்

இலங்கை ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: ஹசரங்கா விளையாடுவாரா?

19th Jun 2022 11:04 AM

ADVERTISEMENT

 

இலங்கையின் முக்கியமான சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா இன்றைய ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகமென தகவல் வெளியாகியுள்ளது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் இன்று 3வது போட்டியை பிரேமதேச ஸ்டேடியத்தில் விளையாட இருக்கிறது. தற்போது 1-1 என்ற நிலையில் தொடர் சமநிலையில் உள்ளதால் இப்போட்டி முக்கியாமானதாக கருதப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவின் வீரர்களும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி வரும் நிலையில் இலங்கை வீரரும் விலகுவாரா என கேள்வி எழுந்துள்ளது. 

ADVERTISEMENT

“கடந்த போட்டியில் பீல்டிங்கின் போது வனிந்து ஹசரங்காவுக்கு தொடையில் சதைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் எங்களது மருத்துவ குழுவின் மேற்பார்வையில் இருக்கிறார். தினமும் மருத்துவக்குழு வீரர்களது பிட்னசஸ் குறித்து தகவளை அளித்து வருகிறது. ஒருநாள் தொடர் முழுவதும் ஹசரங்கா விளையாடுவார்” என இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க: 88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் மத்திய பிரதேச அணி

ADVERTISEMENT
ADVERTISEMENT