செய்திகள்

ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

19th Jun 2022 03:17 PM

ADVERTISEMENT

 

இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி கொலும்புவில் நடைபெற்று வருகிறது.  

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், மாரனஸ் லபுசேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேர் (கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கெம்ரூன் கிரின், ஜாய் ரிச்சர்ட்சன், மேத்திவ் குன்மன், ஜோஷ் ஹேசல்வுட். 

ADVERTISEMENT

இலங்கை: பதும் நிஷன்கா, நிரோஷன் டிக்வெல்லா (கீப்பர்), குசால் மெண்டிஸ், தனஞ்செய டி செல்வா, சரித் அசல்ன்கா, தசுன் ஷனகா ( கேப்டன்), சமிகா கருணாரத்னே, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வாண்டர்சே, துஷ்மந்த் சமீரா, மகேஷ் தீக்‌ஷனா. 

ஸ்டீவ் ஸ்மித், வனிந்து ஹசரங்கா ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. 

டேவிட் வார்னர் 9 ரன்களுக்கு சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர் முடிவில்  
ஆஸ்திரேலியா அணி 47 ரன்களை எடுத்துள்ளது. 

ஆரோன் பின்ச் 23 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT