செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற 32 அணிகளின் பட்டியல்

DIN

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளின் முழுப் பட்டியலும் தயாராகிவிட்டது.

நியூசிலாந்தை 1-0 என வீழ்த்தி 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற கடைசி அணியாக கோஸ்டா ரிக்கா உள்ளது. அதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி பெருவை 5-4 என பெனால்டி வழியாக வீழ்த்தி 31-வது அணியாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணிகள்

ஐரோப்பா

ஐரோப்பாவிலிருந்து 13 அணிகள் பங்கேற்கின்றன. 64 வருடங்களுக்குப் பிறகு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, குரோசியா, ஜெர்மனி, போர்ச்சுகல், போலந்து, வேல்ஸ்.

தென் அமெரிக்கா

4 அணிகள் பங்கேற்கின்றன. 

பிரேசில், ஆர்ஜெண்டினா, உருகுவே, ஈகுவடார்.

வட அமெரிக்கா

4 அணிகள் பங்கேற்கின்றன. 1986-க்குப் பிறகு கனடா முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ளது. 

கனடா, மெக்சிகோ, அமெரிக்கா, கோஸ்டா ரிக்கா

ஆப்பிரிக்கா

5 அணிகள் பங்கேற்கின்றன.

கேம்ரூன், கானா, செனகல், துனிசியா, மொராக்கோ.

ஆசியா

6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் கத்தார் நேரடியாகத் தகுதி பெற்றது.

கத்தார், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஜப்பான், ஈரான், தென் கொரியா. 


2022 கால்பந்து உலகக் கோப்பை

குரூப் ஏ

கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

குரூப் பி

இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குரூப் சி

ஆர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

குரூப் டி

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

குரூப் இ

ஸ்பெயின், கோஸ்டா ரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்

குரூப் எஃப்

பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோசியா

குரூப் ஜி

பிரேசில், செர்பியா, ஸ்விட்சர்லாந்து, கேம்ரூன்

குரூப் ஹெச்

போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT