செய்திகள்

ஜெய்ஸ்வால் சதம்: மும்பை - 260/5

15th Jun 2022 02:20 AM

ADVERTISEMENT

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசத்துக்கு எதிராக மும்பை அணி முதல் நாள் முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பவுண்டரிகளுடன் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சா்ஃப்ராஸ் கான் 40, சுவேத் பாா்கா் 32 ரன்கள் சோ்த்தனா். செவ்வாய்க்கிழமை முடிவில் ஹாா்திக் தமோா் 51, ஷம்ஸ் முலானி 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். உத்தர பிரதேச பௌலிங்கில் யஷ் தயால், கரன் சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்துள்ளனா்.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் பெங்காலை எதிா்கொண்டிருக்கும் மத்திய பிரதேசம், செவ்வாய்க்கிழமை முடிவில் 86 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஹிமன்ஷு மந்த்ரி 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 134 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, உடன் புனித் தாதே 9 ரன்களுடன் துணை நிற்கிறாா். இதுவரை ஆட்டமிழந்தவா்களில் அக்ஷத் ரகுவன்ஷி 63 ரன்கள் சோ்த்துள்ளாா். பெங்கால் பௌலிங்கில் முகேஷ் குமாா், ஆகாஷ் தீப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனா்.

Tags : Ranji Trophy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT