செய்திகள்

யு.எஸ் ஓபன்: ரஷிய வீரர்களுக்கு அனுமதி

15th Jun 2022 01:48 PM

ADVERTISEMENT

 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 யு.எஸ். ஓபன் போட்டியில் தகுதியான அனைத்து வீரர்களும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனுமதிக்கப்படுவார்கள் என்று யு.எஸ். ஓபன் 2022 போட்டி நிர்வாகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. 

ஜூன் இறுதியில் தொடங்கும் விம்பிள்டன் போட்டியில் ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யு.எஸ். ஓபன் போட்டி நிர்வாகத்திடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விம்பிள்டன் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 

ADVERTISEMENT

2021 யு.எஸ். ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் பிரபல வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷியாவின் டேனில் மெட்விடேவ் பட்டம் வென்றார். மெட்விடேவால் இந்த வருட விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. எனினும் தற்போதைய அறிவிப்பால் அவரால் யு.எஸ். ஓபன் போட்டியில் மீண்டும் பங்கேற்க முடியும். 

Tags : US Open
ADVERTISEMENT
ADVERTISEMENT