செய்திகள்

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி

14th Jun 2022 11:10 PM

ADVERTISEMENT

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், இஷான் கிஷன் 54 ரன்களும் சேர்த்தனர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெம்பா பவுமா மற்றும் ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். கேப்டப்ன் டெம்பா பவுமா 8 ரன்களில் அக்சர் பட்டேல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹென்ரிக்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்களில் டுவெய்ன் பிரிடோரியஸ், கிளாசன், பர்னல் தவிர மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 

இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ADVERTISEMENT

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் தற்போது தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : t20 Ind Vs SA
ADVERTISEMENT
ADVERTISEMENT