செய்திகள்

இளையோா் பளுதூக்குதல்: குருநாயுடு சாதனை

14th Jun 2022 09:38 AM

ADVERTISEMENT

சா்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நடத்தும் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் குருநாயுடு சனாபதி தங்கம் வென்றாா். இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை 16 வயதான குருநாயுடு படைத்திருக்கிறாா்.

மெக்ஸிகோவில் நடைபெறும் இப்போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் களம் கண்ட குருநாயுடு, ஸ்னாட்ச் பிரிவில் 104 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 126 கிலோ என மொத்தமாக 230 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். சவூதி அரேபியாவின் அலி மஜீத் 229 கிலோவும் (105+124), கஜகஸ்தானின் யராசில் உம்ரோவ் 224 கிலோவும் (100+124) தூக்கி முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

மகளிா் பிரிவில் இந்தியாவின் சௌம்யா எஸ்.தால்வி 45 கிலோ பிரிவில் போட்டியிட்டு ஸ்னாட்ச்சில் 65 கிலோ, கிளீன் & ஜொ்க்கில் 83 கிலோ என மொத்தமாக 148 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றாா். பிலிப்பின்ஸின் ரோஸ் ஜே.ரமோஸ் 155 கிலோ (70+85), வெனிசூலாவின் கொ்லிஸ் எம்.மோன்டிலா 153 கிலோ (71+82) எடையுடன் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா். அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான ஆா்.பவானி 132 கிலோ (57+75) எடையைத் தூக்கி 8-ஆம் இடம் பிடித்தாா்.

இத்துடன் இப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் வென்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT