செய்திகள்

2-வது டி20: இந்தியா மீண்டும் முதல் பேட்டிங்

12th Jun 2022 06:38 PM

ADVERTISEMENT


இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டாக்கில் நடைபெறுகிறது. இதிலும் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் குயின்டன் டி காக் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோருக்குப் பதில் ஹெயின்ரிச் கிளாசன் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT