செய்திகள்

ஷனகாவின் அதிரடி ஆட்டம் கடைசி பந்தில் திரில் வெற்றி

12th Jun 2022 12:58 PM

ADVERTISEMENT

 

இலங்கை அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது கடைசி டி20 போட்டியில் இலங்கையின் கேப்டன் துசன் ஷனகாவின் அதிரடி ஆட்டத்தால்  கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா இலங்கைக்குக்கு எதிரான 3வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. வார்னர் 39, ஸ்மித் 37, ஸ்டாய்னிஸ் 38 எடுத்து 20 ஒவர்களில் 176 ரன்களை எடுத்தது. 

அடுத்து ஆடிய இலங்கை அணியினர் சுமாரன தொடக்கத்தையே அளித்தனர். 17 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து இருந்தது. 3 ஓவர்களுக்கு 59 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இலங்கையின் கேப்டன் ஷனகா 12 பந்துகளில் 6 ரன்களுடனும் சமிகா கருணாரத்னே 6 பந்துகளில் 8 ரன்களுடனும் இருந்தனர்.  

ADVERTISEMENT

18வது ஓவர் வீசிய ஜோஸ் ஹேசல்வுட் ஓவரில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்து விளாசினார் கேப்டன் ஷனகா. அங்ஹ ஓவரில் 22 ரன்களை அடித்தனர். 

2 ஒவர்களுக்கு 37 ரன்கள் தேவை. ஜோய் ரிச்சட்சன் ஓவரில் 18 ரன்களை அடித்தனர். 

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. கேன் ரிச்சர்ட்சன் இரண்டு எக்ஸ்ராஸ்  வீசினார். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன்கள். 4 பந்துகளில் 15ரன்கள் தேவை. 4வது பந்தை ஷனகா பவுண்டரிக்கு விளாசினார். 5வது பந்திலும் பவுண்டரி  அடித்தார். யாரும் எதிர்பாக்கத வகையில் 5வது பந்தில் சிக்ஸருமடித்து விளாசினார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது பவுலர் வைடு பாலாக வீசினார். இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

ஷனகா 25 பந்துகளில் 54 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே, ஆஸ்திரேலியா இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தாலும் 2-1 என இலங்கை தனது கடைசி போட்டியில் அபாரமாக விளையாடியது இலங்கை ரசிகர்கள் மத்தியில் புத்துயிப்பு அளித்துள்ளது. 

நாட்டின் பொறுளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில் இவ்வெற்றியை இலங்கை ரசிகர்கள் சமூக வலைதலங்களில் வெகுவாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷனகா தனது டிவிட்டர் பக்கதில் பகிர்ந்த வீடியோவில் இலங்கை ரசிகர்களின் உணர்சிகளை பார்க்க முடிந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT