செய்திகள்

ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி

12th Jun 2022 11:27 AM

ADVERTISEMENT

 

பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ரொனால்டோ உலக கால்பந்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் மற்றும் உலகின் சிறந்த வீரருக்கான கோல்டன் பந்தை ஐந்து முறை வென்றுள்ளார்.

லாஸ் வேகஸ் ஓட்டலில் 2009 அன்று  தான் பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீது  நெவாடாவின் கேத்ரின் மயோர்கா தொடுத்த வழக்கை நீதிபதி ஜெனிபர் டோர்சி தள்ளுபடி செய்தார்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட 42 பக்கத் தீர்ப்பில், “மயோர்காவின் வழக்கறிஞர்கள் முறையான வழக்குச் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதனால்  மயோர்கா இந்த வழக்கைத் தொடரும் வாய்ப்பை இழக்கிறார். இது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய்யான வழக்கு. மேலும் மயோர்காவின் வழக்கறிஞர் லெஸ்லி ஸ்டோவாலின் தவறான நடத்தையை நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது” என்றும் நீதிபதி ஜெனிபர் டோர்சி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT