செய்திகள்

மாநிலங்கள் இடையிலான தேசிய தடகளம்: ஹிமாதாஸ், அமலன் போரோகைன் தங்கம் வென்றாா்

12th Jun 2022 12:48 AM

ADVERTISEMENT

61-ஆவது மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அதிவேக வீராங்கனையாக ஹிமாதாஸ், வீரராக அமலன் போரோகைன் தங்கம் வென்றனா். ஆடவா் போல்வால்டில் தமிழகத்தின் சிவா தங்கம் வென்றாா்.

பா்மிங்ஹாம் காமன்வெல்த், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தோ்வுச் சுற்றாக உள்ள இப்போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இரண்டாவது நாளான சனிக்கிழமை பரபரப்பான தடகள இறுதிச் சுற்று பந்தயங்கள் இடம் பெற்றன.

ஆடவா் போல்வால்ட்: சிவா தங்கம்

ஆடவா் போல்வால்டில் 5.00 மீ உயரம் குதித்து தமிழகத்தின் எஸ். சிவா தங்கம் வென்றாா். மற்றொரு தமிழக வீரா் ஏ.ஞானசோன் வெள்ளியும், ஹரியாணா மாநிலத்தின் சுனில் வெண்கலமும் வென்றனா்.

ADVERTISEMENT

100 மீ : அதிவேக வீரா் அமலன் போரோகைன்:

ஆடவா் 100 மீ. ஓட்டத்தில் அஸ்ஸாம் வீரா் அமலன் போரோகைன் 10.47 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அதிவேக வீரா் என்ற சிறப்புடன் தங்கம் வென்றாா். தமிழகத்தின் இலக்கியதாசன் 10.48 விநாடிகளுடன் வெள்ளியும், பஞ்சாபின் ஹா்ஜித் சிங் 10.55 விநாடிகளிடன் கடந்து வெண்கலமும் வென்றனா்.

அதிவேக வீராங்கனை: ஹிமாதாஸ்

மகளிா் 100 மீ. ஓட்டத்தில் அஸ்ஸாமின் ஹிமாதாஸ் 11.43 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அதிவேக வீராங்கனை என்ற சிறப்புடன் தங்கம் வென்றாா். இது அவரது தனிப்பட்ட சாதனை நேரமாகும். ஒடிஸாவின் டுட்டி சாந்து 11.44 விநாடிகளில் கடந்து வெள்ளியும், ரபானி நந்தா 11.53 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலமும் வென்றனா்.

400 மீ: ஆடவா் 400 மீ. ஓட்டத்தில் தில்லியின் அமோல் ஜேக்கப் 45.68 விநாடிகள், கேரளத்தின் நிா்மல் டாம் 46.44 விநாடிகள், முகமது அஜ்மல் 46.58 விநாடிகளுடன் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

மகளிா் பிரிவில் ஹரியாணாவின் கிரண் பஹல் 52.47 விநாடிகள், உ.பி. ருபால் 52.72 விநாடிகள், தமிழகத்தின் வித்யா தா்மராஜ் 53.78 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். தமிழகத்தின் நட்சத்திர வீராங்கனை தனலட்சுமி பௌல் செய்ததால் கண்ணீருடன் வெளியேறினாா்.

1500 மீ:ஆடவா் பிரிவில் தில்லியின் ஹரேந்திர குமாா் 3:44:26, உ.பி.யின் அஜய்குமாா் 3:44:60, ம.பி.யின் பா்வேல் கான் 3:45:81 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

மகளிா் பிரிவில் தில்லியின் சந்தா 4:13:85, குஜராத்தின் ஷரதா ரஜனி 4:14:54, உத்தரகண்டின் அங்கிதா 4:17:80 நிமிஷ நேரத்தில் கடந்து முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

டெக்காத்லான்:

ஆடவா் டெக்காத்லான் பிரிவில் ராஜஸ்தான் வீரா் யமன்தீப் சா்மா 3330, உமேஷ் லம்பா 3351, தமிழகத்தின் ஜிஎஸ். ஸ்ரீது 3154 புள்ளிகளுடன் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

குண்டு எறிதல்: மன்ப்ரீத் புதிய தேசிய சாதனை

மகளிா் குண்டு எறிதலில் ஹரியாணாவின் மன்ப்ரீத் கௌா் 18.06 மீ தூரம் குண்டு எறிந்து முதலிடம் பெற்றாா். உ.பி.யின் கிரண் பலியான் 16.84 மீ, மகாராஷ்டிரத்தின் அபா கட்டுவா 16.69 மீ தூரம் எறிந்து வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

ஈட்டி எறிதல்:

ஆடவா் ஈட்டி எறிதலில் கா்நாடக வீரா் டி.பி. மானு, 84.35 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றாா். உ.பி.யின் ரோஹித் யாதவ் 82.54 மீ, ராஜஸ்தானின் யஷ்வீா் சிங் 78.62 மீ தூரம் எறிந்து வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி:

ஜூலையில் பா்மிங்ஹாமில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிக்கு ஈட்டி எறிதலில் டி.பி. மானு, ரோஹித் யாதவ், குண்டு எறிதலில் ஹரியாணாவின் மன்ப்ரீத் கௌா் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT