செய்திகள்

ரஞ்சிக் கோப்பை: மும்பை உலக சாதனை

10th Jun 2022 03:09 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: ரஞ்சிக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிஆட்டம் ஒன்றில் உத்தரகாண்ட் அணியை 725 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் முதல் தர கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தது மும்பை. இதன் மூலம் 92 ஆண்டுகள் சாதனையையும் தகா்த்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 647/8 ரன்களைக் குவித்தது. சுவேத் பாா்கா் 252, சா்ப்ராஸ் கான் 153 ரன்களைக் குவித்தனா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய உத்தரகாண்ட் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடா்ந்து 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை 261/3 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது.

உத்தரகாண்ட் அணிக்கு 794 ரன்கள் என்ற இமாலய இலக்கு வெற்றிக்கு நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய உத்தரகாண்ட் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் குல்கா்னி, முலானி, தனுஷ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

725 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி: இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் உலக சாதனை படைத்தது மும்பை.

ஏற்கெனவே இங்கலாந்தில் குயின்ஸ்லாந்து அணியை 685 ரன்கள் வித்தியாசத்தில் ஷெபில்ட் ஷீல்ட் அணி வென்றதே உலக சாதனையாக இருந்தது. தற்போது மும்பை 92 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தது.

மற்றொரு காலிறுதியில் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ம.பி. அரையிறுதிக்கு முன்னேறியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT