செய்திகள்

கேன் வில்லியம்சனுக்கு கரோனா

10th Jun 2022 03:02 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரால் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் இன்று முதல் தொடங்குகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் 5 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார். தற்போது அவரால் 2-வது டெஸ்டில் பங்கேற்க முடியாது. 2-வது டெஸ்டில் வில்லியம்சனுக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படுவார். கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் நியூசி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT