செய்திகள்

2028 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெறும்: டேவிட் ஜான் நம்பிக்கை

10th Jun 2022 07:04 PM

ADVERTISEMENT

2028-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெறும் என்று ஒடிசா ஹாக்கி அணியின் இயக்குநர் டேவிட் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 2022 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிர் அணி 4-வது இடத்தைப் பிடித்தனர். இது இந்திய ஹாக்கி அணியின் உத்வேகத்தை காட்டுவதாக உள்ளது. 

இதையும் படிக்க- நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்

தற்போது அணியில் உள்ள ஜுனியர் ஹாக்கி வீர்ர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும் அதிக அனுபவம் கிடைத்திருக்கும். எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவமும் பெற்றிருப்பார்கள். 

ADVERTISEMENT

இந்திய ஹாக்கி அணிக்கு இது மகிழ்ச்சியான நேரம். ஆனால், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஹாலந்து ஆகிய அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி 8 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT